மும்பையில் பெண் ஒருவரிடம் நண்பனாக பழகி பாலியல் வன்கொடுமை செய்த நபர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் விட்டுவிடுவதாக மிரட்டி ரூ. 10 லட்சம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் 41 வயதுடைய பெண் ஒருவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2023 பிப்ரவரி 16ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு ஒரு தனியார் டாக்ஸியில் திரும்பினார்.

அப்போது அந்த டாக்ஸியின் டிரைவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்த நிலையில் கடந்த 2023 மார்ச் 23ஆம் தேதி ஒரு உணவகத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது அந்த ஓட்டுநர் ஜூஸில் மயக்க மருந்து கலந்து அந்த பெண்ணிடம் கொடுத்தார். அதனை குடித்த அந்தப் பெண் மயங்கிய நிலையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார்.

பின்னர் அந்த வீடியோக்களை இணையதளத்தில் விட்டு விடுவதாக கூறி அந்த பெண்ணை மிரட்டி ரூ. 10 லட்சம் பணம் பறித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் worli காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்த டிரைவரை தேடி வந்த நிலையில் அவர் மும்பை கார்கர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.