முன்னாள் இந்திய பிரதமர் தேவ கவுடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளேன். ஓரிரு நாட்களில் உடல்நிலை சரியாகி வீடு திரும்புவேன், உடல்நிலை குறித்து கவலை வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த இவருக்கு 89 வயதாவது குறிப்பிடத்தக்கது.