திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ்க்குண்டாறு பகுதியில் வனவர் அழகுராஜா தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்றில் 2 குட்டிகளுடன் 5 யானைகள் குளித்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென காட்டு யானைகள் வனத்துறையினரை ஓட ஓட விரட்டியது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனத்துறையினர் ஓட்டம் பிடித்து தப்பித்தனர்.

இந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து குண்டாறு பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. எந்த நேரத்திலும் காட்டு யானைகள் கொடைக்கானலுக்குள் நுழைந்து விடும் சூழல் இருக்கிறது. இதனால் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.