
இந்தியாவில் கோடை காலத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். மாம்பழங்களின் சுவை பலருக்கும் பிடிக்கும் நிலையில் பல்வேறு வகையான மாம்பழங்கள் இந்தியாவில் இருக்கிறது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நகரில் ஹூனாஉதா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சங்கல்ப் சிங் பரிஹாரின் என்பவரின் தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் 24 வகையான மாம்பழங்கள் இருக்கும் நிலையில் அதில் 8 வகை வெளிநாட்டு ரகத்தை சேர்ந்தவை. இதில் மியாசகி எனும் விலை உயர்ந்த மாம்பழமும் இருக்கிறது.
இந்த மாம்பழம் ஒரு கிலோ 2.7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தன்னுடைய மாம்பழத் தோட்டத்தை பாதுகாக்க வெளிநாட்டு நாய் ஒன்றினை விவசாயி வளர்த்து வருகிறார். அதோடு மாம்பழங்களை பாதுகாப்பதற்காக தோட்டத்தில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களையும் பொருத்தியுள்ளார். மேலும் ஒரு மாம்பழத் தோட்டத்தை இவ்வளவு பாதுகாப்பான வசதியுடன் விவசாயி பராமரித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கூறுகிறார்கள்.