இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து விட்டது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த நிறுவனம் டெல்லியை எடுத்த நொய்டாவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 331 மாவட்டங்களை சேர்ந்த 32,000 குடும்பத்தினர் கலந்து கொண்டு பதில் அளித்துள்ளனர். இவர்களில் 66% ஆண்கள், 34 சதவீதம் பெண்கள். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் கடந்த 3 வருடங்களில் 39 சதவீத குடும்பங்கள் ஆன்லைன் மோசடியால் பாதிப்படைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இவர்களில் 24 சதவீதம் பேருக்கு அவர்கள் இழந்த பணம் திரும்ப கிடைத்துள்ளது.

அதன் பிறகு புகார் கொடுத்தவர்களில் 70% பேருக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. இவர்களில் 23 சதவீத பேர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு 10% பேர் ஏடிஎம் கார்டு மோசடி, 10 சதவீதம் பேர் வங்கி கணக்கு மோசடி, 16 சதவீதம் பேர் பிற வகையான மோசடியால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 57 சதவீதம் பேர் தாங்களும் தங்கள் குடும்பமும் இந்த ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.