டெல்லி நரேலா பகுதியில் உள்ள ஆசிரியை ரிஷி குமார் மீது, போலீசார் தாக்குதல் நடத்துவதை காட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தகவலின்படி, அவர் zomato-வில் உணவு ஆர்டர் செய்த பிறகு அதை ரத்து செய்துள்ளார். பிறகு அந்த டெலிவரி பாய், பணம் கேட்க வந்ததையடுத்து, ரிஷி பணம் கொடுக்க மறுத்ததால், டெலிவரி பாய் போலீசாரை அழைத்துள்ளார்.

போலீசார் வந்தவுடன், ரிஷி வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதுடன், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் வீடியோவில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பலரும் போலீசாரின் நடத்தைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். “ரிஷி குமார் மது அருந்திய நிலையில், டெலிவரி பாய்யையும், போலீசாரையும் மரியாதை இல்லாமல் பேசி உள்ளனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில், மது அருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், டெலிவரி பாய் அர்ஜுன், பணி நெருக்கடியால் புகார் அளிக்காமல் சென்றுவிட்டார்.

அதனால், ரிஷிக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது” என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்துக்கு இடமளித்துள்ளது.