முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் திமுக எம்பி கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில ஆண்டுகளாகவே செரிமான கோளாறு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதற்காக ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் ராஜாத்தி அம்மாளுக்கு நேற்று இரவு பிரச்சனை தீவிரமாகியுள்ளது. இதனால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.