விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்க ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. சமீபகாலமாக பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க, திமுகவும் களத்தில் இறங்கியுள்ளது. முதல் ஆளாக தூத்துக்குடியின் முக்கிய முகமாக இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்