இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை இல்லாமல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். போதைப் பொருளை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அதிகப்படுத்தவும் மருந்து கடைகளில் தீவிர சோதனை நடத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.