நாடு முழுவதும் 6 மாநிலங்களில், 10 இடங்களில் ரோப் கார் சேவையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5 கிலோமீட்டர் வரையும், அதனையடுத்து தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை வரை 4.6 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோப் கார் சேவை அமைக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மதிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை ஆய்வு நடத்த தொடங்கியுள்ளது. மேலும் புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகளும், சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான ஆய்வுகளும் மேற்கொண்டு ரோப் கார் சேவை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.