விஜயின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண உள்ளது. அதிமுக பாஜக கட்சிகளின் கூட்டணி உறுதியாகிவிட்டது. தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோயம்புத்தூர், கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி அடுத்தடுத்து பலரை திமுகவில் இணைத்து வருகிறார்.

சேலம் மற்றும் ராணிப்பேட்டையில் மாற்றுக் கட்சியினர் சுமார் 1000 பேர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.