மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2025 26 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பட்ஜெட் விவரம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டது போல தமிழ்நாட்டிற்கும் பல புதிய திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. வருமான வரி வரம்பு ரூபாய் 12 லட்சம் ஆக உயர்த்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளார்.