தமிழகத்தில் இன்று சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பள்ளியில்  மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் முன் ஜென்மம், மறுபிறவி என்பது போல் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியுள்ளார். குறிப்பாக போன ஜென்மத்தில் உள்ள பாவ புண்ணியங்களை வைத்து தான் அவர்கள் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்று கூறினார். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகள் சங்கமும் மகாவிஷ்ணு மீது புகார் கொடுத்துள்ள நிலையில் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இவருக்கு சொந்தமான அறக்கட்டளை திருப்பூரில் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் மற்றொரு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகாவிஷ்ணு ஆஸ்திரேலியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் காவல்துறையினர் அவரை தேடி வருவதால் தான் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருடைய செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.