
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தொடக்கம் முதலே மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும் ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்தது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ஜார்கண்ட் மாநிலத்தில் வெற்றி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது முதல்வராக ஹேமந்த் சோரன் இருக்கிறார். இவர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜேஎம்எம் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், ஆர்ஜேடி 4 இடங்களிலும், இடதுசாரிகள் 2 இடங்களிலும், ஜேடியு 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இதில் காங்கிரஸ் கூட்டணி அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் ஹேமந்த் சோரன் ஆட்சியை தக்க வைத்துள்ளார்.