பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பிரபல பளு தூக்கும் வீரராக சதீஷ் சிவலிங்கம் பாஜகவில் இணைந்தார். சதீஷ் சிவலிங்கம் காமன்வெல்த் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று ஆறு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர்.

மேலும் சதீஷ் சிவலிங்கம் அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார். வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சதீஷை வருகிற சட்டமன்ற தேர்தலில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியில் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.