அமெரிக்க நாட்டில் முதன்முறையாக விண்வெளிக்கு சென்று வந்த வீரர் வால்டர் கன்னிங்ஹாம் மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1968 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதியில் முதல் தடவையாக அப்பல்லோ 7 எனும் விண்கலத்தில் மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. இதில் விண்வெளி வீரர்கள் வால்டர் எம். ஷிரா, வால்டர் கன்னிங்ஹாம், டான் எப் ஐசெல் ஆகியோர் விண்வெளியில் 11 நாட்கள் இருந்தனர்.

மேலும், அந்த விண்வெளி பயணமானது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதன் பிறகு, பாதுகாப்பாக அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அன்று அதே விண்கலம் மூலம் பூமி திரும்பி விட்டார்கள். அதன்படி விண்வெளிக்கு முதல்முறையாக சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் என்ற பெருமை அவர்களுக்கு கிடைத்தது.

அந்த மூன்று வீரர்களில் மற்ற இருவரும் இறந்த நிலையில் மீதமிருந்த வால்டர் கன்னிங்ஹாம் என்பவரும் உடல் நல பாதிப்பால் நேற்று மறைந்தார். அவருக்கு 90 வயது என்றும் நாட்டின் கடற்படை மற்றும் சிறப்புப்படையில் விமானியாக பணிபுரிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1963 ஆம் வருடத்தில் நாசா விண்வெளி மையம், அவரை விண்வெளி வீரராக தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.