திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாத்தி கணவர் இறந்துவிட்டார். பாப்பாத்தி 100 நாள் வேலை மற்றும் தோட்ட கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று பாப்பாத்தி கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தபோது ஸ்விட்ச் பாக்ஸில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கிரைண்டர் வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக வீட்டில் இருந்த பொருட்களுக்கும் தீ வேகமாக பரவியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 1/2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். ஆனால் இந்த தீபத்தில் வீட்டிலிருந்த பித்தளை வெள்ளி குத்துவிளக்குகள், தங்க ஆபரணங்கள் உள்பட விலை உயர்ந்த பொருட்கள், ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்து நாசமானது. இதனை பார்த்து பாப்பாத்தி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.