கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறமும் பின்புறமும் பல்வேறு வகையான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பள்ளியின் பின்புறத்தில் இருந்த பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. மேலும் கதண்டுகள் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது.

இதுகுறித்து தலைமை ஆசிரியை வளருமதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ கதண்டுகளை அகற்றினர். இதனால் பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.