
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளியான சஞ்சயராஜ் நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்றும், 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிக்கிய சஞ்சய் ராய்க்கு சாகும் வரை சிறை தண்டனை போதாது இன்னும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் முன்பு இளநிலை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.