லியோ திரைப்படத்திற்கான அதிகாலை சிறப்பு காட்சி ரத்தானதை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களது மனநிலை குறித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். 

லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா ரத்தான நாள் முதல் இன்று வரை தளபதி விஜய் ரசிகர்களால் படத்யொட்டி  கொண்டாடப்படும் பல நிகழ்வுகளுக்கு தமிழகத்தில் அனுமதி என்பது அளிக்கப்படவில்லை.  அதில் முக்கியமான ஒன்றாக ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் அதிகாலை சிறப்பு காட்சிகள் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டது பெரும் மனவேதனையை விஜய் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால் கேரளா,  கர்நாடகா,  ஆந்திரா,  தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கான எந்த தடையும் இல்லாமல்,  படம் வெளியாக உள்ளது. குறிப்பாக  கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஓரிரு வாரங்களுக்கு முன்பே தொடங்கி அனைத்தும் தற்போது விற்று தீர்ந்து விட்டதாக (SOLDOUT)  தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்திலிருந்து கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு சென்று FDFS  பார்க்க டிக்கெட் தேடி ஈசல் கூட்டம் போல் அலைவதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் FDFS  காட்சி தமிழகத்தில் ரத்தானது  குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.