தபால் அலுவலக FD vs NSC

தற்போதெல்லாம் முதலீட்டாளர்கள் பல சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். எனினும் நீங்கள் எவ்வித ரிஸ்கும் எடுக்காமல் நல்ல வருமானத்தை பெற விரும்பினால் அசஞ்சலக சேமிப்பு திட்டமே சிறந்தது ஆகும். தபால் அலுவலக எஃப்டி திட்டத்தில் டெபாசிட் செய்ய விரும்பினால், 1, 2, 3 (அல்லது) 5 ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்யலாம். முதலீட்டு காலத்திற்கு ஏற்றவாறு வட்டி விகிதமானது கிடைக்கும்.

அஞ்சல் அலுவலகத்தில் 5 வருட FD திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 7.5% வட்டியைப் பெறுகிறார்கள். தேசிய சேமிப்பு திட்டம்(NSC) 7.7 சதவீத வட்டி விகிதத்தினை கொடுக்கிறது. இதனிடையே அஞ்சல் அலுவலக FD கணக்கீடு காலாண்டுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது. NSC கணக்கீடானது ஆண்டு அடிப்படையில் செய்யப்படுகிறது.