இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி வருகின்ற மே 8-ம் தேதி நாடு முழுவதும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக தேசிய தொழில் பழகுநர் மேலா நடைபெற உள்ளது.

இதில் பல உள்ளூர் நிறுவனங்கள் பங்கேற்ற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க உள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த மேலா நடைபெற உள்ள நிலையில் இதில் பங்கேற்று பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை இதில் பங்கேற்கலாம் எனவும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.