
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அருண்குமார் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி உள்ளார். தன்னிடம் உள்ள ரூபாய் 20000-யை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி உள்ளார்.
இந்த விளையாட்டின் மோகத்தால் 20000 ரூபாய் இழந்த அருண்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அருண்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் விளையாடி தோற்றதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.