இத்தாலி நாட்டில் மிலான் நகரில் நடைபெறும் பேஷன் ஷோ உலக அளவில் பிரபலம் அடைந்தது. மேலும் இது டாப் 4 பேஷன் ஷோகளில் ஒன்றாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மிலான் பேஷன் ஷோ மிலான் நகரில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவை ஆடம்பர ஆடை நிறுவனமான டீசல் நடத்தி வருகின்றது. இதில் சிறப்பு என்னவென்றால், பாலியல் நோய் பரவல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான பாலியல் உறவை அறிவுறுத்தும் விதமாகவும் சுமார் 2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில் இந்த ஃபேஷன் ஷோ நடைபெற்றுள்ளது.

குறிப்பாக மலைபோல் குவிக்கப்பட்ட ஆணுறைகளுக்கும் மத்தியில் பேஷன் ஆடைகளை அணிந்து மாடல்கள் வலம் வந்தனர். இது குறித்து பிரபல ஆடம்பர ஆடை நிறுவனமான டீசல் கூறியதாவது “பாதுகாப்பான பாலியல் உறவு என்ற நோக்கிலேயே இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் மூன்று லட்சம் ஆணுறைகள் தனது ஸ்டோர்களில் இருந்து இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.