திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசய கிணறு வெள்ளம் வரும் காலங்களில் பெரும் அளவு தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை கிணறு உள்வாங்கியது. இதுவரை அந்த அதிசய கிணறு நிரம்பவே இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரு மழையால் வந்த வெள்ள நீரையும் அதிசய கிணறு உள்வாங்கியது.

ஆனால் அதிசய கிணற்றின் பக்க தடுப்பு சுவர்களும் வெள்ளத்தில் இடிந்து விழுந்ததால் கட்டுமான பொருட்களும் கட்டிட இடிபாடுகளும் குவிந்து தண்ணீரை உள்வாங்க முடியாமல் நின்றது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்திய பிறகு தண்ணீர் மீண்டும் வேகமாக கிணற்றுக்குள் செல்ல ஆரம்பித்தது. கிணறு நிரம்பினால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.