தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் அல்லு ரமேஷ் (52). இவர் தெலுங்குயுலகில் காமெடி நடிகராக ரசிகர்களால் அறியப்பட்டவர். இவர் நேற்று காலை மாரடைப்பின் காரணமாக திடீரென மரணம் அடைந்துள்ளார்.

இந்த தகவலை அவருடைய நண்பரும் இயக்குனருமான ஆனந்த் ரவி தன் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அல்லு ரமேஷ் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.