இந்தி சின்னதிரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சிவாங்கி (25). இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இளம் நடிகையான சிவாங்கி திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு கடந்த 2 நாட்களுக்கு முன்பாக எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. நான் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த 2 நாட்களாக கடினமான சூழலில் இருந்து மீண்டு வருகிறேன். நான் மருத்துவர்கள் மற்றும் என் குடும்பத்தினர் உதவியால் குணமடைகிறேன். என்னுடைய நண்பர்களும் ரசிகர்களும் அவர்களுடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை சிவாங்கி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.