தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஏகே 62 படத்தில் நடிப்பதற்கு நடிகர் அஜித் தயாராகி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கதையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக லைகா நிறுவனம் மகிழ் திருமேனியை புதிய இயக்குனராக கமிட் செய்துள்ளது. ஏகே 62 படத்தின் அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏகே 62 திரைப்படம் ரீமேக் படமாக இருக்கலாம் என்று இணையதளத்தில் ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என விஜயின் சச்சின் படத்தை இயக்கிய இயக்குனர் ஜான் மகேந்திரன் கூறியுள்ளார். இதனால் ஏகே 62 திரைப்படம் கண்டிப்பாக ரீமேக் படமாக இருக்காது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அஜித் தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளதால் விரைவில் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.