நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

போலி வலைதளம் மூலம்  நடைபெறும் கேஒய்சி ஊழல் குறித்து SBI கூறுவதாவது, தங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட உள்ளதாகவும், அது முடக்கப்படுவதை தவிர்க்க உடனடியாக கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய சொல்லி பல பயனர்களுக்கு சைபர் குற்றவாளிகள் போலி மெசேஜ்களை அனுப்புகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த நபர் இந்த எஸ் எம் எஸ் க்கு உடனடியாக பதில் அளிக்கும் விதமாக, கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய தீங்கிழைக்கும் இணைப்பை கிளிக் செய்கிறார்.

உண்மையான வங்கியின் வலைதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு போலியான வலைதளத்திற்கு பாதிக்கப்பட்ட நபர் திருப்பி விடப்படுகிறார். பின்னர் பாதிக்கப்பட்ட நபர் தமது சரியான தனிப்பட்ட தகவல்களுடன் உள் நுழைகிறார். இதனை பாதிக்கப்பட்டவரின் இணையதள வங்கியில் கணக்கினை அணுக மோசடி நபர்கள் பயன்படுத்துகின்றனர்.

மேலும் otp உள்ளிட்டவற்றை கூட மோசடிக்காரர்கள் போலி வலைத்தளம் மூலம் திருடி, அதன் மூலம்  பாதிக்கப்பட்ட நபரின் கணக்கில் பணத்தை திருடும் பொருட்டு அதனை தவறான முறையில் பயன்படுத்துகின்றனர். இத்தகைய எஸ்எம்எஸ் களுக்கு பதிலளிக்கும் முன் அந்த எஸ்எம்எஸ்ஐ அனுப்புவோரின் விவரங்களை சரி பார்க்கவும், URL  இணைய முகவரி அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ பக்கம் தான என்பதை சரி செய்து கொள்ளும்படியும் SBI அறிவுறுத்தி வருகிறது. 

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf