இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டே இருக்கின்றன. மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அரசு மற்றும் வங்கி தரப்பிலிருந்து பொது மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரத்தன் டாட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் 479 ரூபாய் இலவச ரீசார்ஜ் செய்யப்படும் என்று இணையத்தில் போஸ்ட் ஒன்று வைரல் ஆகி வருகிறது. ஏர்டெல், ஜியோ, VIபயனர்கள் இதனை 56 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் பொய் என்று தெரியவந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்கள் தரவுகள் அனைத்தும் திருடப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.