மாநிலத்தில் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான பலனை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி அங்கன்வாடிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அதிக அளவு பயின்று வருவதால் அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஊழியர்கள் நடந்து கொள்ள வேண்டும். அடிப்படை கல்வி கற்பிக்கும் பணிகள் அனைத்தும் இனி smart Tv மூலம் நடத்தப்படும். அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு பால் மற்றும் முட்டைகள் வழங்க வேண்டும்.

அவை தரமானதாகவும் சுகாதாரமாகவும் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் சுவையூட்டப்பட்ட தாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக குழந்தைகளின் உடல் நலனை பரிசோதிக்க வேண்டும் என்றும் அனைத்து தாய்மார்களுக்கும் சத்தான உணவு வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.