நடிகர் கவின்  அவருடைய நீண்ட நாள் காதலி ஆன மோனிகாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவின் லாஸ்லயாவை காதலித்து வந்த நிலையில் அதன் பின் இரண்டு பேரும் பிரிந்து விட்டார்கள். அதன்பிறகு இவர்கள் இது குறித்து எந்த ஒரு பதிலும் கூறாமல் இருந்து வந்த நிலையில் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மோனிகா லாஸ்லியாவின் தோழி என்பதுதான். அவர் இவருடைய ஸ்டைலிஷ் ஆகவும் பணியாற்றியுள்ளார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கவின் இன்ஸ்டாகிராமில் தந்து கல்யாண வீடியோவை பதிவிட்டுள்ளார். இதேபோன்று அவருடைய மனைவி மோனிகாவும் இன்ஸ்டா பதிவு ஒன்றை கேட்டு போட்டுள்ளார். அதில் கவினுடன்  செல்ஃபி ஒன்றை காரில் இருந்து எடுத்துக் கொண்டு அதில் Officially Mrs. K’ என்ற caption உடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். லாஸிலியாவிற்கு பதிலடி கொடுப்பதற்காக மோனிகா இந்த பதிவை போட்டிருப்பதாக கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Kavin M (@kavin.0431)