தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதே சமயம் விரைவில் விஜய் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்றைக்கு அடைந்திருக்கும் வளர்ச்சியையும் பக்குவத்தையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் நிகழ்ச்சியுடன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 14 வருஷம் கழித்து இருவரும் வாரிசு படத்தில் இணைந்து நடித்திருந்தோம். முன்னோடி இருந்ததை விட இப்போது விஜய் ரொம்பவே அழகாக மாறி இருக்கிறார். மரியாதை, நட்பு மற்றும் அன்பு காட்டுவதில் விஜய் மாறவே இல்லை என்றும் பிரகாஷ்ராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.