செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் கோரிக்கை நியாயமான கோரிக்கை. காங்கிரஸில் 18 சட்டமன்ற உறுப்பினர்தான் இருக்காங்க. அந்த 18 சட்டமன்ற உறுப்பினர் இருக்கின்ற ஒரு கட்சிக்கு கட்சித் தலைவர் பதவி கொடுக்குறாங்க. காங்கிரஸ் கட்சியோட துணைத் தலைவர் கொடுக்குறாங்க. அதை அருகிலே அமர வைத்து இருக்கிறாங்க. நாங்கள் வைத்த கோரிக்கையை சட்டமன்ற பேரவை தலைவர் நிராகரிக்கிறார்.

அவையினுடைய மரபை அவர் கடைபிடிக்கவில்லை. அது மட்டுமல்ல,  அவர் தனக்கு தனிப்பட்ட அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கின்றார். நாங்கள் அதில் குறிக்கிடவில்லை. சட்டப்பேரவை தலைவர் சட்டப்பேரவை  அவருடைய மரபுக்கு உட்பட்டது. அவர் எந்த உறுப்பினரை எந்த இடத்தில் அமர வைக்க வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. இருந்தாலும் காலங்காலமாக சட்ட மன்ற  எதிர்க்கட்சியின் உடைய தலைவர் அருகில் தான் துணை தலைவர் அமர வைப்பது.  இதுவரைக்கும் அப்படித்தான் இருந்து இருக்குது.

ஆனால் மற்ற உறுப்பினர்களை…  எதிர்க்கட்சி மற்ற உறுப்பினர்களை….  ஆளுங்கட்சி மற்ற உறுப்பினர்களை… மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள்  விருப்பப்படி ஆங்காங்கே அமர வைப்பார்கள், அதில் நாங்கள் குறிக்கிடவில்லை. ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மரபு படி நியமிக்கவும் இல்லை,  அதோடு அந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில் தான் துணைத் தலைவர் அமர வைக்க வேண்டும், அதையும் நிராகரிக்கிறார்.

அதுதான் நாங்கள் வலியுறுத்தினோம். அதை எல்லாம் நிராகரிக்கிறார். ஆகவே வேண்டுமென்றே,   சட்டப்பேரவை தலைவர் நடுநிலமையோடு செயல்படக் கூடியவர். அந்த ஆசனம் ஒரு புனிதமான ஆசனம். அதிலே அமர்ந்து நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தான் நாங்கள் வற்புறுத்தினோம் என தெரிவித்தார்.