செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்த்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். நம்பிக்கை தான் முக்கியம். மரபை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்.  மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அமர்ந்து இருப்பது புனிதமான இருக்கை.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நடுநிலைமையோடு இருக்கனும். ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் நடுநிலைமையோடு இருக்க வேண்டும் என்பவர்தான் சட்டபேரவை தலைவர். அவர் நடப்பார் என்று எண்ணுகிறோம். இதற்கு மேலயும் நடக்கவில்லை என்றால் ? அந்த மரபு மீறுகிறார் என்று  மக்களுடைய பார்வைக்கு படுவார்கள் என தெரிவித்தார்.

சட்ட பேரவையில் ஜனநாயகம் பின்பற்றபட்டிருந்தா நாங்க ஏன் வெளிய வந்து உங்ககிட்ட பேசிட்டு இருக்க போறோம். ஜனநாயகம் பின்பற்றலையே… ஜனநாயகம் பின்பற்றாத காரணத்தினால் தான் ஊடகத்தின் வாயிலாக… பத்திரிகையின் வாயிலாக… இது வெளியே தெரிய வேண்டும்.

இந்த ஆட்சி எப்படிபட்ட ஆட்சி ? இந்த அவை எப்படி நடந்து கொண்டிருக்கிறது ? மரபை கடைபிடிக்கிறார்களா? சட்டத்தை மதிக்கின்றார்களா ? என்பதை எல்லாம் நாட்டுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தான்  ஊடகத்தின் வாயிலாக…  பத்திரிகையின் வாயிலாக நாங்கள் வந்து இங்கே பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.