செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி,  இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில்  திமுக செய்யுறது, தொட்டிலையும் ஆட்டிவிட்டு,  பிள்ளையும் கிள்ளுற மாதிரி இருக்குது. சட்ட மன்ற பொது தேர்தலின் போதும்,  நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறையில் வாடி கொண்டிருக்கின்ற 36  இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்று மூலைக்கு மூலை பிரசாரம் செய்த முதலமைச்சர் தான் இன்றைய முதலமைச்சர்.

அப்படி பிரச்சாரம் செய்து விட்டு, 15.11.2021 திராவிட முன்னேற்ற கழக ஆட்சி…. அவர்களை விடுதலை செய்ய கூடாது என்பதற்காகவே அரசாணை 488 கொண்டு வந்து,  அரசாணை நிறைவேற்றியது திமுக அரசாங்கம். இதை போட்ட பிறகு அவர்கள் விடுதலை ஆக முடியாது. அதை தான் உச்சநீதிமன்றம் நிறுத்தி வச்சிருக்குது. இதை எல்லாம் வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தியது திமுக அரசாங்கம்.

ஆனால்  அண்ணா திமுக உளபூர்வமாக சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற 36 இஸ்லாமியர்கள் உடல் நலக்குறைவு, வயது மூப்பினால் இன்றைக்கு 20 ஆண்டுக்கு மேல் சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நாங்கள் கருத்தை தெரிவித்தால்,  இன்றைக்கு முதலமைச்சருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என தெரிவித்தார்.