செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எனக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசை உயர்நீதிமன்றம் ரத்து செய்யும் என்று தெரியும்.  உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பை சொல்லி உள்ளது. தேவர் குருபூஜைக்கு இரண்டு வருடம் எடப்பாடி பழனிச்சாமி செல்லாமல் இருந்துவிட்டு, இப்போது செல்வதற்கு நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.

ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வந்தவர்களையே துரோகம் செய்து ஏமாற்றியது மட்டுமல்லாமல்,  நான்காண்டு காலம் ஆட்சியில தன்னால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து கொண்டு….   வட தமிழகத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக…. வன்னிய பெருங்குடி மக்களை ஏமாற்றுவதற்காக….  10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என  அறிவிச்சாரு.  கோர்ட்டுக்கு  போனாலும் நிக்காதுன்னு தெரிஞ்சும் அறிவிச்சாரு.

ஒரு சமுதாயத்துக்கு உண்மையாக செய்யவேண்டும் என்றால் ? நான்காண்டு கால ஆட்சியில் இருந்தபோது  செய்யாமல்… ஆட்சியை விட்டு போற நேரத்துல….  தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கின்ற நேரத்தில்… 10.5%  இட ஒதுக்கீடு அறிவிச்சாரு. அது வன்னிய பெரு மக்களை ஏமாற்றுவதற்கு…

அது மட்டுமல்லாமல் இதனால கிட்டத்தட்ட 109 சமுதாய மக்கள் உள் ஒதுக்கீடு ஒரு  சமுதாயத்துக்கு மாத்திரம் செய்வது… மற்றவர்களை பாதிக்கும் என்கின்ற அச்சத்தில் அவர்கள் எல்லாம்எடப்பாடிக்கு எதிர்ப்பா மாறினாங்க. இன்றைக்கு வட தமிழகத்திலும் இவர் ஏமாற்று வேலை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

தென் தமிழகத்தில் வாழ்கின்ற 109 சமுதாய மக்களை எதிராக…. இவர் சுயநலத்தால்…. எடப்பாடி தொகுதியில் ஜெயிக்கணும் என்கிற ஒரே காரணத்துக்காக…. அவர் செய்த தில்லுமுல்லு…. மக்களை வெகுண்டல செய்தது. அதுதான் காரணம்.  அவர் செய்த ஒரு பெரிய பொலிட்டிக்கல் பிளண்டர்…. மக்களுக்கு ஏற்கனவே துரோக சிந்தனை உள்ள அவர்  ஒரு கண்ணுல வெண்ணெய்,

இன்னொரு கண்ணுல சுண்ணாம்பை வைக்கிற மாதிரி செயல்பட்டது இன்றைக்கு அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு பயந்து கொண்டு தான் இரண்டு ஆண்டாக தேவர் குறு பூஜைக்கு அவர் வரவில்லை. இப்போது பாராளுமன்ற தேர்தல் வருது அதனால தேவர் குறு பூஜைக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு எடப்பாடி செல்கின்றார் என டிடிவி தினகரன் பேசினார்.