சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  போற போக்குல யார் மேல வேணும்னாலும் அவதூற பரப்பலாம். என்ன பொய் வேணும்னாலும் சொல்லலாம். எதுக்கும் ஆதாரம் வேண்டாம். பொய் பேசுறோம் எண்கின்ற கூச்சமே வேணாம். அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வாட்ஸ் அப் மெசேஜ் தான். அதுல என்ன வதந்திகளை என்றாலும் பரப்பலாம்.

அதை நம்புறதுக்கு ஆட்டுமந்தை கூட்டம் தயாரா இருக்குன்னு அடிச்சு விடுறாங்க. தம் புடிச்சி அவங்க ஊதுற பொய் பலூனை உண்மை என்கிற ஊசியை வைத்து ஈஸியா நாம உடச்சிடுவோம்னு எரிச்சல் அவங்களுக்கு இருக்கு. பொய்கள் என்னைக்குமே பதிலாகாது. போலியான பெருமைகள் நமக்கு தேவையில்லை. உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைச்சா போதும்.

நம்முடைய செய்திகள் உண்மையானதாக இருக்கனும்.  பாஜகவினரை போல போலியாக இருக்க கூடாது. அவங்களுக்கு இப்ப ஒரே ஒரு தேவை தான். என் மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போறாங்கன்னு பாக்கறாங்க. அங்க போய் போட்டோ எடுத்துகிட்டு பார்த்தீங்களா…  கோயிலுக்கு போறாருன்னு பரப்புறாங்க.

தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா கோயிலுக்கும் தான் அவங்க போய்கிட்டு இருக்காங்க. அது அவங்களோட விருப்பம், அதை நான் தடுக்க விரும்பல.  தடுக்க தேவையில்லை,  நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரிகளே தவிர,  ஆன்மீகத்திற்கு எதிரியல்ல. கோவிலும் –  பக்தியும் அவரவர் உரிமை. அவரவர் விருப்பம். ஏராளமான கோவில் நுழைவு போராட்டங்களை நடத்தி,  வெகு மக்களோட வழிபாட்டு உரிமையை வாங்கி கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம். தலைவர் கலைஞர் அவர்களுடைய பராசக்தி டயலாக்,  தான் அவுங்களுக்கு பதில்.

கோவில்கள் கூடாது என்பதல்ல…  கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது. கோவில்களிலும்,  பத்தியையும் பாஜக தனது அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்குது. ஆன்மிகத்தை அரசியலில் மிகச் சரியாக பகுத்து பார்க்க தெரிந்த… பகுத்தறிவாளர்கள் தான் தமிழ்நாட்டு மக்கள். இந்த கோயிலை இடிச்சிட்டாங்க. அந்த கோயிலை இடிச்சிட்டாங்க.  அப்படின்னு வாட்ஸ் அப்ல பூகம்ப படங்களை போட்டு வதந்தி பரப்புறாங்க என தெரிவித்தார்.