ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பாக பி.சதீஷ்குமார் தயாரிப்பில், பி.ஜி. மோகன்-எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கமர்ஷியல் க்ரைம் த்ரில்லர் படம் “தீர்க்கதரிசி”. விரைவில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியிருப்பதாவது “இதுபோன்ற சிறிய படங்கள் செய்ய தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை.

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குனர்கள் வரிசையில் இந்த இயக்குனர்களும் இணையவேண்டும். அதேபோல் ஒரு திரைப்படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் தான். இப்படத்தின் கதை சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச் சிறந்த நடிகர் என்பது இப்படத்தின் வாயிலாக தெரிந்தது. இதனிடையே கண்டெண்ட் சிறப்பாக இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம். ஆகவே இந்த படம் வெற்றி பெற தங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி” என அவர் பேசினார்.