பிரபல ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர் தான் டாம் சைஸ்மோர்(61). இவர் சேவிங் பிரைவேட் ரியான், ஹீட், பிளாக் ஹாக் டவுன், நேச்சுரல் பார்ன் கில்லர்ஸ் உட்பட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

இந்நிலையில் டாம் சைஸ்மோர்க்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சிலுள்ள வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் டாம் சைஸ்மோர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.