நாட்டில் மிகவும் காஸ்ட்லியான தோசையாக கருதப்படும் 24 காரட் தங்கத்தில் செய்த தோசை எங்கு விற்கப்படுகிறது என உங்களுங்கு தெரியுமா?.. அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தில் பஞ்ஜாரா மலைப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவுஸ் ஆப் தோசா உணவகத்தில் தான் இந்த விலை அதிகம் கொண்ட தோசை விற்பனைக்கு வந்து உள்ளது.

இதன் விலையானது ரூ.1,000 மட்டுமே ஆகும். இந்த தோசையின் சிறப்பு என்னவெனில், 24 காரட் தங்கத்தால் பூசப்பட்டிருக்கும். இதுகுறித்து செய்தி அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த உணவகத்துக்கு வந்து சுத்தமான தங்க இழை பூசப்பட்ட தோசையை ஒரு பிடிபிடிக்கிறார்கள். இந்த தங்கதோசையின் விலை ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, இதை ஏராளமானோர் வாங்கி ருசிபார்த்து வருகிறார்கள்.