இந்தியாவில் உள்ள 4000 கிராமங்களில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை சார்பில் விவசாயிகள் நலன் சார்ந்த தொழில்முனைவோர் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பொது சேவை மையங்களில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சிக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, செயலாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தேசிய கால்நடை இயக்கம் மற்றும் ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம் திட்டம் மூலம் கால்நடைகளை இன அபிவிறுத்தி செய்து தொழில் முனைவோராக மாற்ற வழங்கப்படும் சலுகைகள் குறித்து மத்திய அமைச்சர் விளக்கினார். மேலும் தேசிய கால்நடை இயக்கம் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதாகவும் கூறினார்.