டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன்-2 திரைப்படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமல்ஹாசனின் விக்ரம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தை மீண்டும் துவங்கியுள்ளனர். லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகிறது. இந்தியன்-2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான சூட்டிங் பீகாரில் அண்மையில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து திருப்பதியில் நடந்து முடிந்தது. அதோடு இப்போது சென்னையில் உள்ள பனையூரில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் சூட்டிங் முடிந்ததும் தனுஷ் கோடியில் இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.