சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க சில வருடங்களுக்கு முன்பு சங்கமித்ரா பட அறிவிப்பை வெளியிட்டனர். கேன்ஸ் பட விழாவில் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். சரித்திரக் கதையில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தார் சுந்தர் சி. எனினும் பொருளாதார பிரச்னையால் இப்படம் அப்போது டிராப் ஆனது.

இந்த நிலையில் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாக தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இருப்பினும் படத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம். அதிலும் குறிப்பாக நாயகன் ஜெயம்ரவி விலகி விட்டார். அவருக்கு பதில் விஷால் நடிப்பதாக செய்திகள் வெளியாகியது. தற்போது நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு அவருக்கு கணிசமான தொகையை சம்பளமாக தரவும் பேசி வருகின்றனர்.