ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என கூறியுள்ளனர். இதனால் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சின்னம் தொடர்பாக இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நாளை (ஜனவரி.30) தீர்ப்பு வெளியாகிறது. அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்த தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 31 ஆம் தேதி தொடங்குகிறது. அதன்பின் பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை, சின்னம் இல்லை. ஆகவே எப்படி ஒரு மாதத்தில் மக்களை சந்திப்பது என அதிமுகவில் இரண்டு அணியினரும் குழப்பம் அடைந்துள்ளனர்.