தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி கரீப் கல்யாண யோஜனா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் எத்தனை ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டதோ அதை கணக்கில் கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 0.50 சதவீதம் அளவுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு மே முதல் நவம்பர் மாதம் வரையிலும், கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலும் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களின் விவரம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உரிய விவரங்களை வழங்குமாறு சென்னை தெற்கு துணை ஆணையாளர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அ. ஏகாம்பரம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.