அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி மக்களவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு ஒரு மாத காலத்திற்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்திகளை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக மற்றும் பாஜக இடையே எந்த பிரச்சனையும் இல்லை எனவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.