கவர்ன்மென்ட், ஆப்பிள், ஆபிஸ், இங்கிலிஷ், பிரிட்டிஷ், சைக்கிள், ஃபாரஸ்ட், ரேஞ்ச் போலீஸ், கோர்ட், எக்ஸ்பிரஸ், காம்பவுண்ட் ஆகியவை எல்லாம் கர்நாடகத்தில் தார்வாட் அருகிலுள்ள பத்ராபூர் எனும் கிராமத்திலுள்ள மக்களின் பெயர்கள் ஆகும். இங்கு உள்ள ஹக்கி பிக்கி என்ற பழங்குடி சமூகத்தினர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய பல்வேறு மொழிகளையும், வக்ரிபூலி(குஜராத்தியைப் போல) பேசக்கூடியவர்கள். மேலும் இங்கு வசிக்கக்கூடிய மக்கள் தங்களது நிகழ்வுகளுடன் தொடர்புடைய பெயரையே குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர்.

வெளியுலகம் அறியாத இவர்கள் தங்களது குழந்தைகள் பிறந்த தருணத்தில் நேர்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் பெயர் வைக்கின்றனர். எடுத்துக்காட்டாக எக்ஸ்பிரஸ் வாகனத்தில் பயணித்தால் அவர்களுக்கு “எக்ஸ்பிரஸ்” என பெயர் சூட்டப்படும். அதன்படி ஆங்கிலேயர்கள் ஆண்டபோது பிறந்த ஒருவருக்கு பிரிட்டிஷ் என பெயர் வைத்துள்ளனர். காலப் போக்கில் கொஞ்சம் நிலைமை மாறி இப்போது புது தலைமுறை வழக்கமான பெயர்களை ஏற்க தொடங்கியதால் இந்த நடைமுறை சற்று குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.