இயோன் ஜோசப் கிரான்ட் மோர்கன் செப்டம்பர் 10, 1986ஆம் ஆண்டில் அயர்லாந்தில் பிறந்தார். தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரபல கிரிக்கெட் வீராக உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்தவராக விளையாடி வருகின்றார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திறம்பட ஆடிய இவர்  இடது-கை  ஆட்டக்காரர் ஆவார்.

2019ஆம் ஆண்டு இவரது தலைமையில் இங்கிலாந்து அணி முதன்முறையாக உலக கோப்பையை  வென்றது.இவர் தான் இங்கிலாந்து அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவராகவும், அதிக ரன்கள் எடுத்தவராகவும் உள்ளார். தொடர்ந்து சிறிது காலம் இங்கிலாந்து அணிக்காக ஆடுவார் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.