
பல வருடங்களாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாடு பல்வேறு தேச தலைவர்களின் மாபெரும் போராட்டத்தால் இந்திய நாட்டுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்தது. இதையடுத்து இந்தியா தனக்குரிய அரசியல் அமைப்பை உருவாக்கியது. இதனை நினைவுகூறும் அடிப்படையில் வருடந்தோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
கடந்த 1950ம் ஆண்டிலிருந்து இது தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தியா, குடியரசு நாடு என்ற அந்தஸ்தை பெற்று வருகிறது. இந்திய அரசியல் அமைப்பின் தாய் என போற்றப்பட்டு வருபவர் மேடம் பிகாஜி காமா அவர்கள். இவர் ஒரு வசதியான பார்சி சவுராஸ்ட்ரியன் குடும்பத்தில் வளர்ந்து வந்தவர். இவர் பல சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அதோடு குழந்தையாக இருந்தபோது சிறந்த மொழிவளம் பெற்று விளங்கினார். கடந்த 1861 செப்,.24ல் பிறந்த மேடம் பிகாஜி காமா, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக இந்திய அரசியல் அமைப்பின் தாயாக கருதப்படுகிறார். பெண்கள் உரிமைகள், பெண்கள் போராட்டங்கள் ஆகியவற்றிக்காக குரல் எழுப்பிய தலைவர்களில் இவரும் ஒருவர் ஆவார். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவேண்டும் என இவர் குறிப்பிட்டுள்ளார்.